அர் - (ஆர்) - ஆரியம் = சிவந்த கேழ்வரகு. உல் - (இல்) - இலந்தை = சிவந்த கனிதரும் முட்செடி. (இல்) - (இர்) - இரத்தி = இலந்தை. (இர்) - இராகி = கேழ்வரகு. உல் - எல் - (எர்) எருவை = செம்பருந்து. உல் - உரு - உரும்பு - உரும்பரம் - உதும்பரம் = சிவப்பு, செம்பு. குல் - குலிகம் = சிவப்பு, சாதிலிங்கம். குல் - குரு = சிவப்பு. குருவெறும்பு = செவ்வெறும்பு. குரு - குருதி = சிவப்பு, அரத்தம்.4 குருதிக் காந்தள் = செங் காந்தள். குருதிக்கிழமை = செவ்வாய்க்கிழமை. சுள் - (சொள்) - சோண் - சோணம் = சிவப்பு. சோண மலை = அருணமலை. சோணை = சிவப்பு. சொள் - செள் - (செட்டு) - செட்டி - செம்மலர் மரவகை (வெட்சி). செட்டு - செட்டை - செச்சை = சிகப்பு, செந்துளசி. செய் = சிவப்பு. செய்யன் = சிவந்தவன். செள் - செய் - செய்யான் = செம்பூரான். செய் - செயிர். செயிர்த்தல் = சிவத்தல், கோபித்தல். “கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள” (தொல். உரி. 74) செய் - செயலை = சிவந்த அசோகந் தளிர். செய் - சேய் = சிவப்பு, முருகன். சேயோன் = சிவன், முருகன்.5 செய்ம்மை - செம்மை. சேய் - சே. சேத்தல் = சிவத்தல். சே - சேது = சிவப்பு. சேது - சேத்து = சிவப்பு. சேத்து - சேந்து - சேந்தன் = சேயோன் (முருகன்). சேது - கேது = சிவப்பு. சுல் - (சோல்) - சால் - சாலி = செந்நெல். (சோல்) - சேல் = செங்கெண்டைமீன். சேல் - சேலேகம் = சிந்துரம். (சோல்) - சோர் - சோரி = அரத்தம். 4. அரத்தம் என்பதே சரியான வடிவம். அது முதல் கெட்டு வழங்கி வடசொல்லெனப் பிறழ வுணரப்பட்டு, பின்பு இகரம் முன்னிட் டெழுதப்படுகின்றது. ஒ.நோ: அரங்கன் - ரங்கன் - இரங்கன்.
5. முதற்காலத்தில் சேயோனும் சிவனும் ஒருவரே. |