பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

சுல் - சுல்லு = வெள்ளி.

துல் - துலம் = பருத்தி. துலம் - துலவம் = பருத்தி.

துல் - தூல் - தூலினி = இலவு (பஞ்சு).

தூல் - தூலை = பருத்தி.

தூல் - தூலம் = இலவு.

தூலம் = தூலகம் = பருத்தி.

துள் - துய் = பஞ்சு. துய் - தூய் - தூசு = பஞ்சு.

துள் - தும்பு - தும்பை = வெண்பூச் செடிவகை.

வெள்ளாடைக்குத் தும்பைப்பூவை எடுத்துக்காட்டுவது உலக வழக்கு.

புல் - பல். பல் - (பன்) - பன்னல் = பருத்தி. பன் - பனுவல் = பருத்தி.

பல் - பால். பால் - வால் = வாலுகம் = வெண்மணல்.

புள் - பள் - பளிங்கு. பள் - பாள் - பாளிதம் = சோறு.

பால் - பாலை = பாலுள்ள மரவகை, அம் மரம் வளரும் நிலம்.

முல் - முல்லை = வெண்பூக்கொடி வகை, அது வளரும் நிலம்.

முல் - மல் = மல்லி - மல்லிகை.

முள் - முரு - முருந்து = மயிலிறகின் அடி, எலும்பு.

முள் - முளரி = வெண்டாமரை. முள்- (முண்டு) = முண்டகம் = வெண்டாமரை.

முள் - விள் - விள = வெண்தோட்டுக்காய் மரவகை. விள - விளம். விள - விளா - விளவு - விளவம். விளா - விளாத்தி. விள - விளர் - விளரி = விளா. விளா = நிணம்.

விளவம் - வில்வம் = விளாவிற்கு இனமான கூவிளம்.

கருவிளம் = மரப்பட்டை கருத்துள்ள விளாவகை.

விள் - வெள் - வெள்ளில் = விளா.

வெள் - வெள்ளம் = வெளுப்பான புதுப்பெருக்கு நீர்.

வெள் - வெள்ளி. வெள் - வெள்ளை.

வெள் - வெளிச்சி = வெண்ணிறக் கெண்டை மீன்

வெள் - வெளிர் - வெளிறு = விளையாத வெண்மரம், அறிவின்மை.