பக்கம் எண் :

21

பீத்து - பித்து. ஒ.நோ: தீம் - தித்தி.

பித்து = மயக்கம், மதிமயக்கம், மூளைக்கோளாறு, தலைக் கிறுக்கு, தலைச்சுற்றை யுண்டாக்கும் நீர் (bile), அந்நீரைக்கொண்ட வுறுப்பு (gall - bladder), மயக்கநிலைப்பட்ட காதல் அல்லது அவா.

பித்து - பித்தன் = கிறுக்கன், கழிபெருங் காதலன் அல்லது பற்றினன். பித்து - பிச்சு - பிச்சன்.

பித்து - பித்தம் = பித்து. நீர், பித்தநாடி. பித்தநீர் மிக்கநோய். அந் நோயால் உண்டாகும் தலைச்சுற்று. மூளைக்கோளாறு, மயக்கம், மயக்கக் காதல்.

பித்தம் - பித்தல். பித்தலாட்டம் = மாறாட்டம், ஏமாற்று.

பித்து - பிதற்று. பிதற்றுதல் = உளறுதல். பிதற்று - பினற்று - பினத்து - பினாத்து. பினாத்துதல் = நோய் நிலையில் உளறுதல்.

3. குறியொலிப் படலம்

இசைவு வெறுப்பு முதலிய மனநிலைகளை யுணர்த்தற்கு, வாயாலும் மூக்காலும் இசைக்கும் அடையாள வொலிகள் குறியொலி களாகும்.

(1) வாயொலி

‘ச்சு’ என்பது போன்ற ஒலியை வாயா லிசைப்பது, பிறர் கூற்றை ஒப்புக்கொள்வதையும் ஒப்புக்கொள்ளாமல் இகழ்வதையுங் குறிக்கும். இது ‘உச்சுக்கொட்டல்’ எனப்படும். மறுப்பொலி உடன்பாட்டொலி யினும் வலியதாயும் முகக்குறிப்போடு கூடியதாயு மிருக்கும்.

கையால் வாயிலடித்துக்கொண்டு ஆ வென்று ஆரவாரித்தல் வெற்றிக்குறியாகும். இது ‘ஆவலங் கொட்டல்’ எனப்படும். (வலம் = வெற்றி)

(2) மூக்கொலி

வாய் மூடியிருக்கும் நிலையில், ‘ஊம்’ என்பது போன்ற ஒலியை மூக்காலொலிப்பது, உடன்பாட்டைக் குறிக்கும். இது ‘உம்மெனல்’ அல்லது ‘ஊங்கொட்டல்’ எனப்படும். இது தனித்த நிலையில் உடன்பாட்டையும் இரட்டிய நிலையில் மறுப்பையுங் குறிக்கும்.