எ-டு: | முதன் மிகை: | உந்து - நுந்து | | இடை மிகை: | இலகு - இலங்கு | | கடை மிகை: | முன்- முன்பு |
இனத்திரிபு என்பது உயிரினத் திரிபு, மெய்யினத் திரிபு என்னும் இருவகை இனவாரித் திரிபாகும். அவற்றுள் மெய்யினத் திரிபு, வல்லினத் திரிபு மெல்லினத் திரிபு முதலிய நால்வகைப்படும். எ-டு: | உயிரினத் திரிபு: | பரு - பெரு, வாயில் - வாயல் | | மெய்யினத் திரிபு: | சலங்கை-சதங்கை, தொழுதி - தொகுதி | | வல்லினத் திரிபு: | பொற்றை-பொச்சை, அத்தன் - அச்சன் | | மெல்லினத் திரிபு; | கழங்கு - கழஞ்சு | | இடையினத் திரிபு: | பிள்- பிய் | | ஒலியினத் திரிபு: | ஒளிர்-ஒளிறு |
இத் திரிபுகள் இரண்டும் பலவும் சேர்ந்தும் வரும். எ-டு: மலங்கு - விலங்கு (விலாங்கு) இலந்தை - இரத்தி மோனைத்திரிபு என்பது மோனையாகத் திரிந்து செல்வது. அது ஒருமடி திரிவதும், பலமடி திரிவதும் என இருதிறப்படும். எ-டு: | கிண்டு - கெண்டு | ஒருமடி மோனை | | நீள் - நெடு | | | | | | தம் - தீம் - தித்தி | பலமடி மோனை | | குள் (குடம்) - கூள் - கொடு - கோடு | |
கூள் = வளைவு. வளைந்த வாழைப்பழ வகை கூளிவாழை யெனப்படுதல் காண்க. கோடு = வளைவு. உயிரெழுத்துகளில் எதுவும் எதுவாகவேனும் திரியலாமேனும், உ-அ, உ-இ, என்னுந் திரிபுகள் பெருவழக்கானவும் மொழி வளர்ச்சிக்குப் பெருந்துணை செய்பவும் முதன்மையாய்க் கவனிக்க வேண்டியவுமாகும். எ-டு: | உ-அ | உ-இ | | உகை - அகை | துற்றி - திற்றி | | குள் - கள | புணை - பிணை | | குடும்பு - கடும்பு | புட்டம் - பிட்டம | | குட்டை - கட்டை | புய் - பிய் | | குலை - கலை | புரள் - பிறழ் | | குறுவாய் - கதுவாய் | புரண்டை - பிரண்டை |
|