துக்குணி - தக்குணி | புழுக்கை - பிழுக்கை | துளிர் - தளிர் | முடுக்கு - மிடுக்கு | துணை - தனை | முண்டு - மிண்டு | முடங்கு - மடங்கு | முல்லு - மில்லு | முறி - மறி | முழுங்கு - விழுங்கு | முடி - மடி | முளகு - மிளகு |
குறிலுக்குச் சொன்னது நெடிலுக்கும் ஒக்குமாதலின், மேற்கூறிய திரிபுகளை முறையே ஊ - ஆ, ஊ - ஈ என்றுங் கொள்ளல் வேண்டும். எ-டு: | ஊ - ஆ | ஊ - ஈ | | மூட்டு - மாட்டு | தூண்டு - தீண்டு (தூண்டா விளக்கு = தீண்டா விளக்கு) | | | நூறு - நீறு | | | பூறு - பீறு | | | நூன் - நீன் | | | பூளை - பீளை | | | பூட்டை - பீட்டை |
மெய்யினத் திரிபுகளுள், ள்-ய் சிறப்பாகக் கவனித்தற்குரியது. பல ளகர மெய்யீற்றுச்சொற்கள் யகர மெய்யீற்றுச் சொற்களாகத் திரி கின்றன. எ-டு: | கொள் - கொய் | | தொள் - தொய் | | பிள் - பிய் | | மாள் - மாய் |
ஐகார ஒளகார உயிர்ப்புணரொலிகள் (vowel diphthongs) தோன்றியபின், தனி அகரக்குறிலை யடுத்த யகரமெய் அய் என்று எழுதப்படாமல் ஐ என்றே எழுதப்பட்டு வந்திருக்கின்றது. “அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” (மொழிமரபு. 23) என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க. எ-டு: | அள் = கூர்மை. அள் - (அய்) - ஐ = நுண்மை. | | நொள் - நள் - (நய்) - நை. | | நொள்ளுதல் = தளர்தல். நொள் - நொள்கு. நைதல் = தளர்தல். | | பொள் - பொய் - (பய்) - பை. | | பொய் = உட்டுளையுள்ளது. | | வள் - (வய்) வை = கூர்மை. |
|