அன் என்பது அய் என்று திரிந்தபின் உயிரேறின் ஐகாரமாக எழுதப்படுவதில்லை. | எ-டு: | (அய்) - அயில் = கூர்மை |   | பள் - (பய்) - பயம் = பள்ளம் |   | (வய்) - வயிர் = கூர்மை |  
 இத்தகைய திரிபுகள் தமிழில் நிரம்ப வுள. சில்லிடத்து உயிரினத் திரிபொடு மோனைத் திரிபு கலப்பது முண்டு. இம் முறையில், உ-அ என்பது ஒ-அ என்றாகும்; உ-இ என்பது உ-எ என்றாகும்; உ-எ என்பது மீண்டும் ஒ-எ என்றாகும். உ-ஒ, இ-எ என்பன மோனையாதல் காண்க. எ-டு: | ஒ-அ |   உ-எ |   ஒ-எ |  | ஒழி-அழி  | உகள்-எகிர் | சொருகு - செருகு |  | ஒடுங்கு - அடங்கு | குழுமு - கெழுமு | மொழுகு - மெழுகு |  | கொம்பு - கம்பு | துளி - தெளி |  |  | தொள்ளாடு - தள்ளாடு |  |  |  | தொளத்தி - தளத்தி |  |  |  | பொலிசை - பலிசை |  |  |  | மொக்கை - மக்கை |  |  |  
 கம்பைக் கொம்பு என்பது வடார்க்காட்டு வழக்கு. அதுவே முந்து வடிவாகும்.  குறிலுக்குச் சொன்னது நெடிலுக்கும் ஒக்கும். எ-டு: | ஓ-ஆ | ஊ-ஏ  | ஓ-ஏ |  | கோல்-கால் | ஊர்-ஏர் (எழுச்சி) | தோண்டு - தேண்டு |  | நோடு - நாடு | கூழ்வரகு - கேழ்வரகு | நோடு - நேடு |  | (நோட்டம் - நாட்டம்)  |  | மோடு - மேடு  |   |  | மோளம் - மேளம் |  
 இங்குக் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுச் சொற்களுள், முழுங்கு முளகு மொழுகு மோளம் என்பன பார்த்த அல்லது கேட்டவளவில் கொச்சைபோலத் தோன்றும். ஆயின், அவையே மூலவடிவம் என்பதும், அவற்றின் இகர முதல் வடிவம் அவற்றின் திரிபே என்பதும் இந் நூன்முழுதும் நோக்குவார்க்கு விளங்கும்.  |