பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

சுட்டடிச் சொல்லாக்கத்திற் கேதுவாக, முச்சுட்டொலிகளும் முதலாவது அடைந்த திரிபு கடைமிகை.

எ-டு: ஆ - ஆன் (ஆங்கு), ஆது.

சுட்டொலிகள் முதல் நிலையில் நெடிலாயிருந்தன என்பது முன்னரே கூறப்பட்டது.

அடுத்தபடியாக நிகழ்ந்த சுட்டொலித் திரிபுகள் திரிதலும் இடைமிகையும்.

எ-டு: ஆங்கு, ஆண்டு.

ஞாங்கர் (ஆங்கர்) என்னும் முதன்மிகை புலவர் புனைவாகத் தெரிகின்றது.

நாளடைவில் முச்சுட்டொலிகளும் குறுகின.

எ-டு: ஆ - அ, ஆது - அது, ஆங்கு - அங்கு.

அதா - அந்தா, அதோ - அந்தோ முதலிய திரிபுகளால், சுட்டுச் சொற்களின் இடைமிகை யுணரப்படும்.

சுட்டொலிகள் குறுகியபின், உகரச்சுட்டினின்று உல் என்னும் ஒப்புயர்வற்ற மாபெரு மூலவடி தோன்றிற்று. அது பின்பு, உகரத்தொடு கூடி மொழி முதலாகும் அறுமெய்யோடுஞ் சேர்ந்து. குல் சுல் துல் நுல் புல் முல் என்னும் அறுபெருங் கிளையடிகளைத் தோற்றுவித்தது. அவற்றினின்று, முற்கூறிய ஊகாரச் சுட்டுக்கருத்து ஒவ்வொன்றிற்கும், கவையுங்கொம்பும் கிளையுஞ்சினையும் போத்துங் குச்சும் இணுக்குங் கொழுந்துமாக, பற்பல சொற்கள் கிளைத்துந் தோன்றியுமுள்ளன. லகரமெய்யினின்று எங்ஙனம் பிறமெய்கள் திரிகின்றன என்பது ‘செந்தமிழ்ச் சொல்லியல் நெறிமுறைக’ளில் காட்டப் பெறும்.

மூவின மெய்களுள் வல்லினமெய் தமிழ்ச்சொற்கு ஈறாவ தில்லை. மெல்லின மெய்களுள் மகரமும் இடையின மெய்களுள் லகரமும், ஒலித்தற்கெளியவாம். இவ் விரண்டனுள் மகரமே முந்திய தாயினும், சொல்லாக்கத்திற்கு லகரவீற்றடியே பெரும்பாலும் பயன் படுத்தப் பெற்றுள்ளது.

சில கருத்துகட்குச் சில கிளையடிச் சொற்கள் மறைந்துவிட்டன. அவை வழங்கின நிலம் இந்துமாவாரியில் மூழ்கிப் போனமையாலும்,