பக்கம் எண் :

41


(3)நீன், நீம் என்னும் இருபெயர்களும், இன்றும் தென்னாட்டுப் பழங்குடி மக்கள் வழக்கில் உள்ளன.
(4)நீம் என்பதன் வேற்றுமையடி வழக்கற்றது.
(5)நீன் நீம் நீங்கள் என்னும் முப்பெயரும், முறையே, இழிந் தோன் ஒத்தோன் உயர்ந்தோன் ஆகியோரைக் குறிக்க ஆளப் பெறும்.

ii. முன்னிலை யொருமைப்பெயர்

நீன் - நீ (நான்காம் நிலை)

ஒ.நோ: தம்பின் - தம்பி (கடைக்குறை)

நீ என்னும் பெயர் வேற்றுமை யேலாதிருப்பது. அது நீன் என்னும் பெயரின் திரிபாதலை உணர்த்தும்.

iii. முன்னிலைப் பன்மைப் பெயர்

பன்மைப் பெயர்இரட்டைப் பன்மைப்பெயர்
ஊம்ஊங்கள்}4ஆம் நிலை
நூம்நூங்கள்
நீம்நீங்கள்

iv. இரட்டைப் பன்மைப் பெயரின் வேற்றுமையடி

ஊங்கள் - உங்கள்
நூங்கள் - நுங்கள்
நீங்கள் - நிங்கள்

v. முன்னிலைப் பன்மைப் பெயர்

நீ + இர்= நீயிர்}5ஆம் நிலை
= நீவிர் (இலக்கணப் போலி)
= நீர் (தொகுத்தல்)

நீ என்னும் ஒருமைப் பெயரடியாகப் பன்மைப்பெயர் அமைக்கக் கருதி, அவர் என்னும் படர்க்கைப் பெயருக்கொப்ப ரகர விகுதி யேற்றி, நீயிர் என அமைத்தனர் இடைக்காலத்தினர். நீம் என்னும் சொல் பல வகுப்பாரிடை வழக்கற்றுப் போனமையே இதற்குக் காரணம். நீம் என்னுஞ் சொல்லைப்போன்றே நீர் என்பதும் ஒத்தோனைக் குறித்தலையும், இவற்றுள் பின்னது நிர் என வேற்றுமைத் திரிபு கொள்ளாமையையும், நோக்குக.