பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(சுலிர்) - சிலிர் = தளிர். சிலிர்த்தல் = தளிர்த்தல்.

துள் - துளிர் - தளிர்.

நுகும்பு = பனையின் இளமடல். நுங்கு = பனையின் இளங்காய்.

நுகு - (நகு) - நாகு = இளமை.

நுள் - நுழு - நுழுந்து = இளம்பாக்கு. நுழாய் = இளம்பாக்கு.

நுனை = அரும்பு. நுனை - நனை.

நுரு = தளிர். நொரு = இளம்பிஞ்சு.

நுரு - (நுறு) - நறு - நாறு - நாற்று = இளம்பயிர். நாறுதல் = தோன்றுதல். நாறு = முளை, இளம்பயிர்.

புள் - (பிள்), பீள் = இளங்கதிர், இளமை.

பூட்டை = இளங்கதிர். பூட்டை - பீட்டை.

(புகு) - பூ - போ - போத்து = இளங்கிளை.

போந்து = பனங்குருத்து. போந்து - போந்தை = பனங்குருத்து.

பொகில் = அரும்பு. பொகில் - போகில் = அரும்பு.

புதல் = அரும்பு.

முள் - முளை = முளைக்கும் வேர் தளிர் முதலியன; மரக்கன்று.

முருந்து = இளந்தளிர், இளவெலும்பு. முருந்து - முருந்தம் = கொழுந்து.

முறி = தளிர். முறிதல் = துளிர்த்தல்.

முகுரம் = துளிர்.

முகுள் - முகுளம் = அரும்பு. முகுள் - முகிள் - முகிளம் = அரும்பு. முகிள் - முகிழ் = அரும்பு. முகிழ் - முகிழம். முகை = அரும்பு.மொக்கு = அரும்பு. மொக்கு - மொக்குள் = அரும்பு.

மொக்கு = அரும்பு. மொக்கு - மொக்குள் = அரும்பு.

முட்டு = பிஞ்சு. முட்டுக்காய் = பிஞ்சுக்காய், முட்டுக் குரும்பை = சிறு குரும்பை.

மூசு = பிஞ்சு (பலா).

முட்டு - மொட்டு = அரும்பு.

முதள் = அரும்பு.