பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(நுடு) - நொடு - நொடுநொடு. நொடுநொடுத்தல் = துடுக்கா யிருத்தல். நொடு - நொடுக்கு (வி.கு.).

(புடு) - பொடு - பொடுக்கு (வி.கு.). பொடுக்கென்று போய் விட்டான் என்னும் வழக்கைக் காண்க. பொடு - பொடு பொடு (வி.கு.).

(புடு) - படு பட - படபட - படபடப்பு.

பட - படக்கு. படக்குப்படக்கெனல் = துடித்தல். அச்சத்தால் நெஞ்சம் துடித்தல்.

முடு - முடுகு - முடுக்கு, முடுகுதல் = விரைதல்.

முடுக்குதல் = வேகமாய் ஓட்டுதல்.

முடுகுவண்ணம் = விரைந்து செல்லும் குறிலிணை வண்ணம்.

முடுக்கு-மொடுக்கு (வி. கு.).

முடு-மொடு-மொடுமொடு(வி.கு.).

முடு-(மடு)-மட-மடமட(வி.கு.).

v. தகர வெதுகை

குது-குதுகுது-குதுகுதுப்பு=விரைவு.

குது-கது-கதும்(வி.கு)

கது-கதழ்-கதழ்வு=விரைவு.

கதழ்வும் துனைவும் விரைவின் பொருள்”                 (தொல்.உரி. 17.)

கது-கதி. கதித்தல்= விரைதல். கதி = விரைவு, வேகம்.

(புது)-(பது)=பதறு-பதற்றம் = பதட்டம்.

(பது)-பதை-பதைபதை-பதைபதைப்பு.

(முது)-(மது)-மத-மதமத(வி.கு.).

(முது)-விது-விதுவிது-விதுவிதுப்பு = நடுக்கம், விரைவு.

விது-விதும்பு-விதுப்பு. விதும்பல் = விரைதல், விரைந்துகூட விரும்புதல். விதுப்பு = விரைவு, விரைந்த வேட்கை.

‘அவர்வயின் விதும்புதல்’, ‘கண்விதுப்பழிதல்’ என்னும் திருக்குறள் அதிகாரப் பெயர்களை நோக்குக.