ஏன் - என் - அன் - அல். | ஏம் - எம். | | ஏம் - ஆம் - ஓம் | | எம் - அம் - ஒம் |
யாம் நாம் என்னும் பெயர்கள் வேரளவில் ஒன்றேயாயினும், திரிபு வேறுபாடு காரணமாகவும் வசதிநோக்கியும், முறையே தனித் தன்மைப் பன்மையாகவும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாகவும் ஆளப்பட்டன. முன்னிலையில் நீ நீம் (நீர்) நீங்கள் எனவும், படர்க்கையில் அவன் அவர் அவர்கள் எனவும், இழிவொப்புயர்வு ஆகிய முந்நிலை பற்றிய பெயர்கள் ஏற்பட்டுவிட்டமையாலும்; தன்மையிலும், அரசரும் இறைவனும் தம்மை யாம் என்றே சுட்டுவதாகக் கூறுவது மரபாத லாலும்; யாம் நாம் என்னும் ஒற்றைப் பன்மைப் பெயர்களினின்று யாங்கள் நாங்கள் என்னும் இரட்டைப் பன்மைப் பெயர்கள் தோன்றி யுள்ளன (4ஆம் நிலை). முதலாவது, யாங்கள் என்பது தனித்தன்மைப் பன்மையாகவும், நாங்கள் என்பது உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாகவும் வழங்கின. பின்பு, யாங்கள் என்னுஞ் சொல் வழக்கற்றுப் போய்விட்டமையால், அதற்குப் பதிலாக நாங்கள் என்பது தவறாக வழங்கி வருகின்றது (5ஆம் நிலை). வேற்றுமைத் திரிபு எழுவாய் | வேற்றுமையடி | ஏன், யான் | என் | ஏம், யாம் | எம் | நான் | நன் | நாம் | நம் | யாங்கள் | எங்கள் | நாங்கள் | நங்கள் |
தமிழில், நன் என்பது இருவகை வழக்கிலும், நங்கள் என்பது உலக வழக்கிலும் அற்றன. “நங்கள்கோன் வசுதேவன்” என்று திருமங்கையாழ்வார் கூறுதல் காண்க. தெலுங்கிலும் கன்னடத்திலும் நன் என்னும் அடி இன்றும் வழங்குகின்றது. |