பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(2) தாயைக் குறிக்கும் சில சொற்கள் அன் ஈறு பெற்றும் வழங்குகின்றன.

எ-டு:அக்கை - அக்கன்
அம்மை - அம்மன்

இவற்றிலுள்ள ‘அன்’ ஈறு ஒருகால் மறங்குறிக்க வந்திருக்கலாம்.

(3) தாயைக் குறிக்கும் பல சொற்கள் முன்னொட்டுப் பெற்றும் பெறாதும் தமக்கையையும் குறிக்கின்றன.

எ-டு:தாய்தமக்கை
அக்கைஅக்கை
தமக்கை
அச்சிஅச்சி
அவ்வைதவ்வை (தமவ்வை)

தந்தை பெயரும் இங்ஙனம் தமையனைக் குறிக்கும்.

எ-டு: ஐயன் -தமையன்.

(4) குரவர் பெயர்கள் சில விகுதி மாறி அவர்களின் உடன் பிறந்தாரைக் குறிக்கின்றன.

எ-டு:அத்தன் - அத்தை (தந்தையோ டுடன்பிறந்தவள்)
அம்மை - அம்மான் (தாயோ டுடன்பிறந்தவன்)

(5) தந்தை தாய் பெயர் முன்னொட்டுப் பெற்றும் வரும்.

தம்+அப்பன் = தமப்பன் - தகப்பன்.

(தம்+ஆய் = தாய்)

(6) குரவர் பெயர்களுட் சில பிறவற்றின் திரிபாகத் தெரிகின்றன.

எ-டு:அத்தன் - அச்சன்
அம்மை - அவ்வை
அன்னை - அஞ்ஞை

(7) ஆண்பால் குறிக்கும் அன்னீறும் பெண்பால் குறிக்கும் இகர வைகார வீறுகளும், முதற்காலத்தில் குரவர் பெயர்களொடு சேர்ந்திருந்ததாகத் தெரியவில்லை.

எ-டு:அப்பன் - அப்பு
அம்மை - அம்மு

(8) குரவர் பெயர்கள் பாட்டன் பாட்டியரைக் குறித்தற்குப் பால் மயங்காது மீமிசையாக அடுக்கிவருவதுண்டு.