அண் - அண்ணம் = மேல்வாய்; அண் - அணல் = மேல்வாய். அண்ணல் = உயர்வு, உயர்ந்தோன், அரசன், கடவுள். அண்ணன் = பெரியோன், மூத்தோன், தமையன். அண்ணி = அண்ணன் மனைவி. அண்ணாத்தல் = மேனோக்குதல். அணத்தல் = தலையெடுத்து நிமிர்தல். அணர்தல் = மேனோக்குதல். அணரி = மேல்வாய். அத்தாசம் = அந்தரம். அத்தாசமாய்த் தூக்கிக்கொண்டு போகிறான் என்பது தென்னாட்டு வழக்கு. அந்தரம் = ஆகாயம், தேவருலகம். அந்தரக்கோல் = மேலிசை நரம்பு, மேலிசை. அம்பரம் = மேலிடம், ஆகாயம், தேவருலகம். (உம்பரம் - அம்பரம்) (குதி - கதி.) கதித்தல் = எழுதல். (13) குரவர் பெயர் ஒருவனுக்கு உயர்ந்தோரான ஐங்குரவருள்ளும் இரு முதுகுரவர் மிகச் சிறந்தவராதலின், அவரைக் குறித்தற்கு உயர்வு குறித்த உகரச் சுட்டின் திரிபான அகரத்தை அடியாகக் கொண்ட பல சொற்கள் கிளைத்துள்ளன. தந்தை | தாய் | - - - - - - | அக்கை | அச்சன் | அச்சி | அத்தன் | அத்தி | அப்பன் | அம்மை(அவ்வை) | - - - - - - | அன்னி, அனி (அணி) | - - - - - - | அன்னை (அஞ்ஞை), அனை | ஆஞன் | | - - - - - - | ஆத்தை | - - - - - - | ஆய் |
குறிப்பு:- (1) கோடிட்ட இடத்திற்குரிய சொற்கள் வழக்கற்றன போலும். |