பக்கம் எண் :

93

(துடு) - துடங்கு - துடக்கம். துடு - தொடு.

தொடு - தொடங்கு - தொடக்கம்.

தொடுதல் = தொடங்குதல். அன்றுதொட்டு = அன்றுதொடங்கி.

(துவ) - துவங்கு - துவக்கம்.

தொன்றுதொட்டு, அன்றுதொடுத்து, தொட்டகுறை (தொடங்கி விட்ட வினைக்குறை) முதலிய மரபுத் தொடர்களை நோக்குக.

iii. தொடுப்பு

தொடுப்பாவது இருபொருட் குண்டான தொடர்பு. அது ஒன்றையொன்று தொட்டபின் நிகழ்வது.

(துடு) - துடை. தொடு - தொடை.

தொடுத்தல் = இணைத்தல்.

தொடு - தொடுக்கு. தொடுக்குதல் = தொட்டால் விழும் நிலையாய்த் தொடுத்துவைத்தல்.

தொடு - தொடுப்பு = இணைப்பு, தகாப் புணர்ச்சியுறவு.

தொடுக்கு - ததொசுக்கு = காப்புணர்ச்சி.

தொடு - தொடுசு = வைப்பு. தொடுசு - தொடிசு.

தொடு - தொடுவு = வீட்டைத் தொடர்ந்த கொல்லை.

தொடு - தொடுவை = தொடுத்திருப்பது, புதிய யானையைப் பயிற்றும்படி தொடுத்துவிட்ட யானை, பாங்கன், வைப்பு.

தொடு - தொடர் - தொடர்பு.

(தொல்) - தொற்று - தொத்து.

iv. துடக்கு

துடக்காவது தொடுப்பா லுண்டாகுங் கட்டு.

(துடு) - துடக்கு = கட்டு. தொடு - தொடக்கு = கட்டு.

துவ - துவக்கு = கட்டு. துய - துயக்கு = கட்டு.

தொடு - தொடர் - தொடர்பு = கட்டு, கட்டப்பட்ட செய்யுள்.

v. தொடர்ச்சி

பல பொருள்கள் முறையே ஒன்றோடொன்று தொடுக்கப்படுவதால் தொடர்ச்சியுண்டாகும்.