பக்கம் எண் :

123

viii. உடல் தளர்தல்

உல் - ஒல் - உல்கு. ஒல்குதல் = தளர்தல்.

ஒல்கு - ஒற்கு - ஒற்கம்.

உள் - ஒள் - (ஒல்) - ஒய். ஓய்தல் = கைகால் தளர்தல்.

உள் - எள் - எய் - எய்ப்பு = தளர்ந்த முதுமை.

உள் - இள் - இள. இளத்தல் = உடல் மென்மையாதல்.

இள் - இளை - இளைப்பு = எய்ப்பு.

குது - குதல் - குதலை = தளர்ச்சி.

சுள் - சொள் - சோர்.

துள் - தொள் - தொள்ளாடு - தள்ளாடு.

துள் - தள் - தளர்.

தொள் - தொய். தொய்தல் = சோர்தல்.

நுள் - நொள் - நொள்கு. நொள்குதல் = இளைத்தல்.

ix. நோதல்

உடலும் உள்ளமும் தளர்தலால் நோவுண்டாம்.

உள் - உளை. உளைதல் = நோதல். உளை - உளைச்சல்.

உள் - இள் - இர - இரங்கு - இரங்கல் = வருந்துதல்.

கும் - குமை. குமைதல் = சோர்தல், வருந்துதல்.

துல் - தொல் - தொலை. தொலைதல் = வருந்துதல்.

நுள் - நொள் - நொய் - நொய்வு = மனவருத்தம்.

நொய் - நொ = வருந்து (ஏவலொருமை).

நொ - நொவ்வு = நோவு. நொவ்வுதல் = வருந்துதல்.

நொ - நொந்தலை = வலியின்மை (பலவீனம்).

நொள் - நொள்ளா - நொள்ளாப்பு = வருத்தம்.

நொள் - நோள் - நோளை = பிணியுண்ட நிலை.

நோள் - நோய் - நோ - நோவு.

x. மெலிதல்

உள் - இள் - இளை. இளைத்தல் = மெலிதல்.

சுள் - சுள்ளல் = மெலிவு. சுள்ளலன் = மெலிந்தவன்.