சுள் - சொள் - (சோள்) - சோணங்கி = மெலிந்தவன் - வள் - து. நுள் - நொள் - நோள் - நோய் - நோய்ந்தான் - நோய்ஞ்சான் = மெலிந்தவன். நோய்தல் = மெலிதல். முல் - மெல் - மெலி - மெலிவு. xi. துன்பம் உடலும் உள்ளமும் நோகக்கூடிய நிலை துன்பம். கும் - குமை = துன்பம், அழிவு. துல் - துன் - துன்பு. துல் - தொல் - தொல்லை = துன்பம். துள் - (துய்) - துயர் - துயரம். துள் - தொள் - தொய் - தொய்யல் = துன்பம். தொய் - தொ - தொந்தரவு. தொந்தரை = துன்பம். தொந்தரித்தல் = துன்புறுத்துதல். நுள் - நொள் - நொய் - நொ - நொம்பு - நொம்பலம் = துன்பம். xii. நிலைதளர்தல் (வறுமையடைதல்) உல் - ஒல் - ஒல்கு - ஒற்கு - ஒற்கம் = வறுமை. ஒல்குதல் = வறுமையடைதல். உள் - எள் - எண்மை. எள் - எளி - எளிமை = வறுமை. எள் - ஏள் - ஏட்டை = வறுமை. ஏள் - ஏழ் - ஏழமை. ஏழ் = ஏழை. சுள் - சொள் - (சோள்) - சோர் - சோர்வு = வறுமை. நுள் - நொள் - நொடி. நொடித்தல் = தளர்தல், கெடுதல். நொய் - நொ - நொந்தகை = வறுமை. நொ - நொந்தலை = வறுமை. முல் - மெல் - மெலி. மெலிதல் = வறுமையடைதல். xiii. தோற்றல் மென்மையால் அல்லது தளர்ச்சியால் தோல்வியுண்டாம். துல் - தொல் - தொலை. தொலைதல் = தளர்தல், தோற்றல். தொலை - தொலைவு = தோல்வி. தொல் - தோல் - தோல்வி. முல் - மெல் - மெலி - மெலிவு = தோல்வி. |