பக்கம் எண் :

125

“மெலிவென்பது முணர்ந்தேன்”                          (கம்பரா. முதற்போ. 181)

முல் - வெல். வெல்லுதல் = மெலித்தல், தோற்கடித்தல்.

வெல் - வென் = வெற்றி, வெல் - வேல் = வெற்றி.

வெல் - வெற்றி.

மெது - மெத்து. மெத்துதல் = மெலித்தல், வெல்லுதல்.

(4) நீளல் துறை

நெகிழும் பொருள்கள் நீளுதலால், நெகிழ்ச்சிக் கருத்தில் நீட்சிக் கருத்துத் தோன்றிற்று. செங்குத்து படுக்கை என்னும் இருவகை வாகிலும் நீட்சி நிகழும்.

i. நீளுதல்

நெகிழ் - நீள் - நீளம். நீள் - நீட்சி.

நீள் - நீர் = நெகிழும் (நீளும்) பொருள்.

நீர் - நீல் = நீலம் = கடல்நீரின் நிறம்.

நீள் - நீட்டு = நீட்டப்படும் ஓலை.

நீட்டு - நீட்டம்.

நீள் - நீடு.

நீள் - நெள் - நெடு - நெட்டு - நெட்டை.

நெடு - நெடில், நெட்டு - நெட்டம்.

நெட்டு = நெடுமை, நெடுந்தூரம். நெட்டம் = நெடுமை, செங்குத்து.

நீட்சி என்பது செங்குத்து வாகிலும் கொள்ளப்படுதல்,

“உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
பருவத்தா லன்றிப் பழா”

என்னும் ஒளவையார் கூற்றால் அறியப்படும்.

கெட்டு - நட்டு - நட்டம்.

நட்டமாய் நிற்கிறான் என்னும் வழக்கைக் காண்க.

ii. நிற்றல்

நிற்றலாவது ஒரு பொருள் செங்குத்தாக நீண்டிருத்தல்.

நீள் - (நிள்) - நில்.

நில் - நிலை - நிலையம்.