பக்கம் எண் :

3

துவல் - துவலை = கூட்டம்.

தொள் - தொண்டி = தோட்டம். தொள் - தோடு - தோட்டம்.

துல் - (துற்று) - தொற்று - தொத்து = பூங்கொத்து.

தொழு - தொழுதி. தொழு - தொகு - தொகுதி. தொகு - தொகை.

தொகு - தொகுப்பு - தோப்பு.

தொழு - தொறு = மந்தை.

நுல் - (நுர) - நிர - நிரை = வரிசை, மந்தை.

புல் - பொல் - பொரு - போர் = படப்பு.

புள் - (பிள்) - பிண்டி = கூட்டம்.

பொள் - பொழி - பொழில் = சோலை.

பொள் - பொய் - பொய்தல் = கூட்டம், மகளிர் கூட்டம்.

புது - புதர். புது - புதை - பொதை. பொது - பொதும்பு - பொதும்பர் = சோலை, மரச்செறிவு.

முகு - முகை = கூட்டம். முகை - மூகை = கூட்டம்.

முல் - (மல்) - மன் - மன்று = அவை.

மன்று - மந்து - மந்தை.

முண்டு - மண்டு - மண்டல் - வண்டல் = ஆயம், மகளிர் கூட்டம்.

முட்டு - முட்டம் = ஊர்.

iii. உறையுள்

மக்களும் மற்ற வுயிரிகளும் கூடி வாழும் இடம் அல்லது பொருந்தி யுறையும் இடம் உறையுளாம்.

உறு - உறை - உறையுள்.

உல் - (உர்) - ஊர்.

குல் - குலம் = வீடு, கோயில். தேவகுலம் = கோயில்.

குள் - குடி = வீடு, ஊர். குடியிருத்தல் = குடியிலிருத்தல், வசித்தல். குடி - குடிசை - குடிகை. குடி - குடில் - குடிலம்.

‘கை’, ‘இல்’ என்பன குறுமைப் பொருள் விகுதிகள்.

ஒ.நோ: கன்னி - கன்னிகை. தொட்டி - தொட்டில்.

கும்பு - கும்பை = சேரி. கும்பு - குப்பு - குப்பம் = சிற்றூர்.