பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

குள் - கள் - களம் - களன். ஏர்க்களம் போர்க்களம் அவைக்களம் என்பவற்றை நோக்குக.

கொள் - கொட்டு - கொட்டம். கொட்டு - கொட்டில்.

கொட்டம் - கொட்டகை. கொட்டம் - கொட்டாரம்.

கொட்டம் - கோட்டம் = தொழுவம், கோயில், அரண்மனை கொள் - கொண்டி = தொழுவம்.

சுள் - செள் - செரு - சேர் - சேரி.

துள் - தொள் - தொழு - தொழுவு - தொழுவம். தொழு - தொறு.

முன் - மன் - மனை. மன் - மன்று - மன்றம்.

மன்று - மந்து - மந்தை.

மன் + திரம் = (மன்றிரம்) மந்திரம் = மனை, கோயில், யானை குதிரைத் தொழுவம்.

‘திரம்’ என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி.

iv. நிறைந்து கூடல்

உறுதல் = நிறைதல்.

குள் - குழு - கெழு - கெழுமு. கெழுமுதல் = நிறைதல்.

கும் (கம்) - கமம்.

“கமம்நிறைந் தியலும்”                                      (தொல். உரி. 57)

கூடுதல் = நிறைதல்.

சுல் - சோல் - சால். சாலுதல் = நிறைதல்.

சால = மிக. சான்றோர் = அறிவு நிறைந்தோர்.

சான்றாண்மை = எல்லா நற்குணங்களும் நிறைந்து அவற்றை ஆளுந் தன்மை.

சால்பு = சான்றாண்மை.

துவல் - துவன்று. துவன்றுதல் = நிறைதல்.

“துவன்று நிறைவாகும்”                                      (தொல். உரி. 34)

முண்டு - மண்டு. மண்டுதல் = நிறைதல், திரளுதல்.

“கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி”                           (திருவாச. 2:135)

மண்டு - மடு. மடுதல் = நிறைதல். மடுத்தல் = நிறைத்தல்.