முழி + கை = முழங்கை. முழி + கால் = முழங்கால். முழி - முழம் = முழங்கையளவு. முள் - முட்டு = கைகாற் பொருத்து. முட்டு - முட்டி = முழங்காற் பொருத்து, கைக்கணு, மடக்கிய முட்டிக் கையாற் செய்யும் மற்போர். முட்டு - முடு - மடு - மடை = பொருத்து, கொளுத்து. முட்டு - மூட்டு = பொருத்து. முண்டு = மரக்கணு, உடற்சந்து. முண்டு - முண்டம் = கணுக்காற் பொருத்து. கட்டுதல் (உள்) - இள் - இழை - இணை. (இள்) - இய் - இயை - இசை. இசைத்தல் = கட்டுதல். குள் - கள் - கட்டு. கட்டு - கட்டில். கட்டு - கட்டணம் = பாடை. புள் - (புண்) - புணை - பிணை. புண் - புணர். புணர்த்தல் = கட்டுதல். புண் - புணி - பிணி. பிணித்தல் = கட்டுதல். புள் - பொள் - பொட்டு - பொட்டணம் = கட்டு. பொட்டணம் - பொட்டலம். முள் - முட்டு - மூட்டு - மூட்டை. ii. முடைதல் உல் - அல். அல்லுதல் = கூண்டு முடைதல். குள் - (குய்) - குயில். குயிலுதல் = நெய்தல், பின்னுதல். நுள் - நெள் - நெய் - நெயவு - நெசவு. புல் - பொல் - பொரு - பொருந்து - பொருத்து. புல் - (புன்) - பின். முள் - முடு - முடை. முடைதல் = பின்னுதல். iii. தைத்தல் உத்து - அத்து. அத்துதல் = தைத்தல். |