பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

பூப்படைந்தவளைத் திரண்டவள் என்பது கொங்கு நாட்டு + வழக்கு. ஒ.நோ: E. virgin, from L. virgo, to swell.

குமர் - குமரி = கன்னி. கன்னியான காளி (துர்க்கை), கன்னிமை, அழிவின்மை.

குமர் - குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன்.

சேயோனைப் பண்டைத் தமிழர் இளைஞனாகவே கருதியிருந்ததால், அவன் குமரன் என்றும் முருகன் என்றும் அழைக்கப்பட்டான். (முருகு = இளமை. முருகன் = இளைஞன்).

குமரன், குமரி என்னும் தென்சொற்களைக் குமாரன் குமாரி என நீட்டி மகனையும் மகளையும் குறிக்க வழங்கியது பிற்காலத்து ஆரிய வழக்கு. தமிழில் இளைஞன் இளைஞை என்றே அவை பொருள் தரும்.

குமரன் குமரி என்னும் தெய்வங்கள் தொன்றுதொட்டுத் தமிழரால் வணங்கப்பட்டு வருபவை.

குல் - கல் - கன். கன்னுதல் = திரளுதல், பழுத்தல். அரத்தங் கட்டுதலை ‘இரத்தங் கன்னுதல்’ என்பர்.

கன் - கன்னி = திரண்டவள், பழுத்த இளைஞை, குமரிநிலை, இளமை, மணமாகாமை.

கன்னி - கன்னிகை = இளங்கன்னி. ‘கை’ ஒரு குறுமைப் பொருள் விகுதி. ஒ.நோ. குடி - குடிகை - குடிசை.

v. மொத்தம் (முழுமை)

மொத்தம் என்பது, ஒருவகைப் பொருள்கள் அல்லது பலவகைப் பொருள்கள் எல்லாம் சேர்ந்த முழுத்திரட்சி.

புள் - (பிள்) - (பிண்டு) - பிண்டம் = தொகுதி, முழுமை, உடம்பு.

முள் - முழு - முழுது = முழுமை. முழுது - முழுவது.

முழு - முழுவல் - முழுவன்.

முழு - (முது) - முதல் = உடம்பு.

முல் - முற்று = முழுது.

முது - மொது - மொத்து - மொத்தம்.

முள் - (மள்) - வள் - வள்ளிது = முழுமை. வள்ளிது - வள்ளிசு.