பக்கம் எண் :

59

குரு - குரை - பெருமை.

குல் - கல் - கன் - கன - கனம் = பெருமை.

சுள் - (சூர்) - சீர் - சிற - சிறப்பு.

புல் - பல் - பரு - பெரு - பெருமை.

முள் - மள் - மண் - மாண் - மாண்பு. மண் = மாட்சிமை. மாண் - மாட்சி. முகு - மகம் = பெருமை.

மகம் - மகத்து - மகந்து - மாந்து - மாந்தன் = படைப்பிற் பெரியவன்.

முன் - மன் - மான் - மானம் = பெருமை.

குறிப்பு: மகன் என்னும் பெயர் மகம் என்பதனின்று திரிந்ததாகவுங் கொள்ள இடமுண்டு. ஆயினும், பிள்ளை என்னும் இளமைப்பெயர் ஆண்பிள்ளை பெண்பிள்ளை எனப் பெரியோர்க்கும் வழங்குதலானும், மகன் மக்கள் என்னும் பெயர்கள் பிள்ளையர்க்கும் பெரியோர்க்கும் பொதுவாயிருத்தலானும், இளமைபற்றிய மகன் என்னும் பெயரே பெரியோனையுங் குறித்ததாகக் கெள்ளப்பட்டது.

ஐயன்

நெருக்கம் செறிவு தொடுதல் பொருந்தல் ஒன்றல் திரட்சி பருமை பெருமை என்பன, முறையே ஒன்றினின் றொன்றெழுந்த தொடர்ச்சிக் கருத்துகள்.

உள் - அள் - அண. அண்ணுதல் = நெருங்குதல்.

அள்ளல் = நெருக்கம்.

அள் = செறிவு. அள்ளுதல் = செறிதல்.

அள் - அள - அளவு - அளாவு. அளவுதல் = தொடுதல், பொருந்தல், கலத்தல்.

அள் = பற்றிரும்பு.

அள்ளுதல் = சேர்த்தல், பொருத்தல், பூட்டுதல்.

அள்ளுக்கட்டுதல் = இரும்புத் தகட்டால் இறுக்குதல். அள் = பூட்டு, வண்டிவில்லைத் தாங்குங் கட்டை.

அள் = வன்மை. வன்மைக் குணம் திரட்சி பருமை பெருமை திண்மை முதலியவற்றால் ஏற்படுவது.