பக்கம் எண் :

99

vi. பிளத்தல்

பிளத்தலாவது ஒரு பொருளை ஒரே முறையில் வெட்டித் திறத்தல் அல்லது துணித்தல். தானாய்த் திறத்தலும் பிளத்தலே.

உடை - உடைப்பு, குள் - கள் - கண் - கணி - கணிச்சி = பிளக்குங் கோடரி.

குள் - கிள் - கிறு - கீறு - கீறல்.

துள் - துற - துறப்பு = திறத்தல்.

துற - துறவு = திறவு. துற - திற - திறவு.

திற - திறப்பு. துறப்புக் குச்சு = திறவுகோல்.

துற - துறவை = திறந்த வெளியிடம்.

மண்டை பிளத்தலை மண்டை திறத்தல் என்று கூறுவது வழக்கு.

திற - தெறி. தெறித்தல் = பிளத்தல், உடைதல்.

புள் - பொள் - பொளி. பொளிதல் = வெட்டுதல், பிளத்தல்.

பொள் - போழ். போழ்தல் = பிளத்தல். போழ் = துண்டு.

புள் - பிள் - பிடு. பிடுதல் = கையாற் பிளத்தல்.

பிள் - பிளவு = துண்டு.

பிடு - பிது - பிதிர். பிதிர்தல் = பிண்டு உதிர்தல்.

பிள் - விள் - விடு. விடுதல் = பிளத்தல். விள்ளுதல் = பிளத்தல்.

vii. வெடித்தல்

வெடிக்கும் பொருள் ஒன்றைப் பிளந்துகொண்டு வெளிவருவதால், பிளத்தற்கருத்தில் வெடித்தற் கருத்துத் தோன்றிற்று.

புள் - பிள் - பிடு - பிடுங்கு - பிடாங்கு = பிடுங்கும் வேட்டு.

பிடாங்கு = பீரங்கி.

அடைத்திருந்தது திடுமெனத் தானே திறந்துவிட்டால், பிடுங்கி விட்ட தென்பர். பிடாங்கு வேட்டினைப் பீரங்கி வேட்டு என்பது தஞ்சை வழக்கு.

பிள் - விள் - விடு - வெடு - வெடி.

விள் - (வெள்) - வெட்டு - வேட்டு.