பக்கம் எண் :

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

- கொல் - கோல் - கோலி = உருண்டையான விளையாட்டுக் கருவி.

கோள் - கோண் - கோணு. கோண் - கோணம் = வளைவு, வளைந்த மூக்கு, பிறைமுக அம்பு. கோண் - கோணல். கோண் - கோணை - கோணையன்.

கோண் - கோடு = வளைவு. கோடுதல் = வளைதல். கோடு - கோட்டம் = வளைவு, ஊர்கோள். கோடு - கோட்டை = வளைந்த மதில், மதில் சூழ்ந்த இடம், ஊர்கோள்.

2. உல் - சுல்

சுல் - சுலவு. சுலவுதல் = வளைதல்.

சுல் - சுள் - சுளை - சுளையம். சுளையமாடுதல் = சுற்றித் திரிதல். சுள் - சுளி. சுளித்தல்= முகத்தோலை வளைத்தல். சுளி - சுழி = வட்டமான கோடு, அதனாற் குறிக்கப்படும் குறும்பு, நீர்ச்சுற்று.சுழி - சுழியம் - சுசியம் = உருண்டைப் பலகாரவகை. சுள் - (சுட்டு) - சுட்டி = வட்டமான கோடு அல்லதுபுள்ளி, வட்டமான நெற்றியணி, சுழி சுழியாற் குறிக்கப்படும் குறும்பு, குறும்பன். சுழி - சுழியன்= குறும்பன்.

சுல் - சுன் - சுன்னம் = வட்டம், வட்டமான கோடு. சுல் - சுற்று. சுற்றுதல் = வளைதல், திரிதல், சூழ்தல், சுழலுதல். சுழி - சுழல்.

சுள் - (சூள்) - சூழ். சூழ்தல் = வளைதல். சுல் - சுர் - சூரல் = சுழல்வளி. சுர் - (சுறு)- சூறை = சுழல்வளி. சூறை + வளி = சூறாவளி.

3. உல் - துல்

துல் - துள் - துண்டு - துண்டம் = வளைந்த மூக்கு. துண்டு - துண்டி - தூண்டி = வளைந்த முள். தூண்டி - தூண்டில்.

துள் - (துடம்) - தடம் = வளைவு;

“தடஎன் கிளவி கோட்டமும் செய்யும்’’                         (உரியியல், 23)

என்பது தொல்காப்பியம்.

துல் - தில் - திரி. திரிதல் = சுற்றுதல். திரித்தல் = வளைத்தல், முறுக்குதல், உருட்டுதல். திரி = முறுக்குண்ட துணி அல்லது கயிறு. திரி - திரிகை = சுற்றும் கல் அல்லது சக்கரம். திரிகை -