விதிக்கப்படும் கடல் வாணிகப்பொருள் (எ-டு: ஏற்றுமதி, இறக்குமதி); சொம் சொந்தப் பொருள் : சொத்து சொந்தப் பொருட்டொகுதி (property). செல்வம் விலைமதிப்புள்ள பொருட்டொகுதி.2 வெறுக்கை செறிந்த செல்வம்; காசு தனி நாணயம் (coin); பணம் காசுத் தொகுதி (money). 2. அரசர் வகை ஊர்த்தலைவர்: குறிஞ்சித்தலைவன் பெயர்கள் - மலையன், வெற்பன், சிலம்பன், பொருப்பன், கானகநாடன். (வெற்பு சிலம்பு பொருப்பு என்பன மலையின் பொதுப் பெயர்கள்). முல்லைத்தலைவன் பெயர்கள் - குறும்பொறை நாடன், அண்ணல், தோன்றல். மருதத்தலைவன் பெயர்கள் - ஊரன், மகிழ்நன், கிழவன். பாலைத்தலைவன் பெயர்கள் - விடலை, மீளி, காளை. நெய்தல் தலைவன் பெயர்கள் - கொண்கன், சேர்ப்பன், துறைவன், மெல்லம்புலம்பன். நாட்டுத்தலைவர்: குரிசில் பிரபு, வேள் குறுநில மன்னன்; குறும்பன் கொள்ளைத் தலைவன்; மன்னன் சிற்றரசன்; கோன் அல்லது கோ அரசன்; வேந்தன் முடிவேய்ந்த பேரரசன், இந்திரன். 3. பேய் வகை இருள் அல்லது கருப்பு இருண்டு தோன்றும் பேய்; பேய் அஞ்சத்தக்க ஆவி; அலகை துன்புறுத்தும் பேய்; சூர் அல்லது சூரர மகள் அல்லது அணங்கு அஞ்சத்தக்க பெண்பேய்; தாக்கணங்கு புடைத்துக் கொல்லும் பெண்பேய்; நோக்கணங்கு பார்வையாற் கொல்லும் பெண் பேய்; மோகினி ஆடவர்க்கு மோகத்தை யுண்டாக்கிக் கொல்லும் பெண்பேய்; இடாகினி இடுபிணந் தின்னும் பெண்பேய்; குறளி குட்டிப்பேய்; பூதம் பெரும்பேய்; கூளி குறும்பூதம்; முனி சடைப்பேய்; ஆலி ஆலமரப்பூதம். 2. ‘செல்வோம்’ என்று சொல்வது செல்வம் என்றும் கையைவிட்டுச் செல்வது செல்வமென்றும் சிலர் பொருட் காரணம் கூறுவது பொருந்தாது. செல்லும் மதிப்புள்ளதே செல்வம். ‘இக் காசு செல்லுமா, செல்லாதா?’ என்னும் வழக்கை நோக்குக! |