வித்துவகை விதை கத்தரிவிதைபோலச் சிறியது; முத்து வேப்பமுத்துப் போல் உருண்டு திரண்டது; காழ் புளியங்கொட்டைபோல் வயிரங்கொண்டது; கொட்டை மாங்கொட்டைபோற் பெரியது. வேர்வகை வேர் ஆழமாக இறங்குவது; கிழங்கு திரண்டிருப்பது; பூண்டு உருண்டு மென்மையாயிருப்பது; கட்டை குட்டையான கற்றையா யிருப்பது. வேரின் பிரிவுகள் ஆணிவேர் தண்டின் தொடர்ச்சியாக ஆழமாய் இறங்குவது; பக்கவேர் ஆணிவேரின் கிளை; சல்லிவேர் பக்கவேர் கிழங்கு பூண்டு முதலியவற்றின் சன்னமான கிளைவேர். அரிதாள்வகை இருவி நெல், கேழ்வரகு முதலியவற்றின் அரிதாள். கட்டை சோளம், கரும்பு முதலியவற்றின் அரிதாள். தூறு தென்னை, பனை முதலியவற்றின் அரிதாள். முருடு வேம்பு, புளி முதலியவற்றின் அரிதாள். அடிவகை தாள் நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி. தண்டு கீரை, வாழை முதலியவற்றின் அடி. கோல் நெட்டி, மிளகாய்ச் செடி முதலியவற்றின் அடி. தூறு குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி. தட்டு அல்லது தட்டை கம்பு, சோளம் முதலியவற்றின் அடி. கழி கரும்பின் அடி; கழை மூங்கிலின் அடி. அடி புளி, வேம்பு முதலியவற்றின் அடி. கிளைப் பிரிவுகள் கவை அடிமரத்தினின்று பிரியும் மாபெருங் கிளை; கொம்பு அல்லது கொப்பு கவையின் பிரிவு;கிளை கொம்பின் பிரிவு; சினை |