பக்கம் எண் :

79

நரல் (ஜனம்)

நாள், நாண்மீன் (27 நக்ஷத்திரங்களில் ஒன்று)

நால்வகைச் செய்யுள்: கடும்பா இன்பா மிறைப்பா பெரும்பா. அல்லது, கடுமை இனிமை மிறைஅகலம் (ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம்)

நினா (ஸ்தாய்)

வலிவு மெலிவு சமன் (தாரம் மந்தரம் மத்திபம்)

நீர்ச்சீலை (கௌபீனம், கோவணம்)

நுகர்ச்சி (அனுபோகம்)

நெஞ்சாங்குலை (இருதயம்)

நெடுஞ்சாண்கிடை வணக்கம் (சாஸ்டாங்க நமஸ்காரம்)

பதியெழுகை (Evacuation)

படமாடம் (சிறுகூடாரம் - Tent)

பண்டுவம், பரிகாரம் (சிகிச்சை)

பலகணி (ஜன்னல்)

பற்றுமுறி (ரசீது)

பாடுகிடத்தல் (வரங்கிடத்தல்)

பிள்ளையார் நோன்பு (விநாயக சதுர்த்தி)

பிறங்கடை (வாரிசு)

புரவுவரி (Revenue)

புலம்பன் (ஆன்மா)

பெண்டு (ஸ்திரீ)

பொதுநாயகம் (Universal Sovereignty)

பொருநன் (சிப்பாய் - Soldier)

பொருள் (அர்த்தம்)

முடிசூட்டு (மகுடாபிஷேகம்)

மதங்கம் (மிருதங்கம்)

மதவலி (Sando)

மருத்துவன் (வைத்தியன்)

மருப்பு (தந்தம்)