பக்கம் எண் :

25

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்                       (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். நற்றிணையில் காணப்பெறும் நப்பாலத்தனார் என்ற புலவரினும் இவர் வேறானவர். பாலாசிரியர் என்பதனால் இவர் சிறுவர்கட்குக் கல்வி கற்பிக்கும் தொழிலை மேற்கொண்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

நூல் :அகம் 172.

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்                       (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். நற்றிணையில் காணப்பெறும் நற்றாமனார் என்ற புலவரும் இவரும் ஒருவரா வேறா என்று ஓர் ஐயம் உள்ளது.

நூல் :அகம் 92.

மதுரைப்பிள்ளை (19 நூ)

நூல் :மதுரை வெண்பாமாலை (1891)

மதுரைப் புல்லங்கண்ணனார்                           (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த சங்கப்புலவர்களுள் ஒருவர். புல்லன் என்பவருடைய மகனாராகவோ புல்லன் என்னும் வேறு பெயருடையவராகவோ இருக்கலாம.்

நூல் :அகம் 161.