மதுரைப் பூதனிள நாகனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் தந்தையார் மதுரையில் வாழ்ந்த பூதன் என்பவராவர். இளநாகன் என்பது இவரது இயற்பெயர். இவர் மதுரை மருதன் இளநாகனார் என்ற புலவரினும் வேறானவர் என்று ஒரு கருத்து உண்டு. மதுரைப் பூவண்டநாதன் வேட்டனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். பூவண்டல் என்பது இவர் பெயர். மதுரைப் பூண்டல் நாதன் வேட்டனார் என்றும், மதுரைப் பூவண்டல் நாதன் வேட்டனார் என்றும் காணப்படுகிறது. பூவண்டல் என்பது ஓர் ஊரின் பெயர். இப்புலவர் இவ்வூரிற் பிறந்து, மதுரையில் வாழ்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகின்றார். மதுரைப் பெருங்கொல்லன் (சங்ககாலம்) இவர் தொழிலால் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர். கொல்லர்மரபினர்.
|