மதுரைப் பெருமருதனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்பு கொண்ட பெயருடைய சங்கப் புலவர்களுள் ஒருவர். இவரைப் பற்றிய வரலாற்றுச் செய்தி எதுவும் தெரியவில்லை. மதுரைப் பெருமருதிளநாகனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். பெருமருதன் என்பார் இவருடைய தந்தையார் என்பர். மதுரைப் போத்தனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். மதுரை மருதங்கிழார் இவருடைய தந்தையார். மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார், மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் என்பார்களோடு உடன் பிறந்தவர்.
|