பக்கம் எண் :

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்               (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப்புலவர்களுள் ஒருவர். தந்தைமதுரை மருதங்கிழார்.

நூல் :நற்றிணை 329, 352.

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்          (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப்புலவர்களுள் ஒருவர். தந்தையார் மதுரை மருதங்கிழார். சொகுத்தனார் என்பவர் இவர் உடன் பிறந்தவர்.

நூல் :அகம் 247, 364; நற்றிணை 388.

மதுரை முத்து உபாத்தியாயர் (19 நூ)

ஊர் :தஞ்சாவூர்.
நூல் :

முத்தாம்பாள்புரம் நாராயணசாமி உபாத்தியாயர் பாடிய ‘பரிதியப்பர் தல புராணம்’ என்னும் நூலுக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம்.

மதுரை முத்துக்கவிராயர் (19 நூ)

நூல் :தேசிங்குராஜன் விலாசம் (1869)

இந்நூல் தேசிங்குராஜன் கதையை நாடக முறையில் கூறுவது.