மதுரை முத்துப்பிள்ளை (19 நூ) | நூல் : | மன்மதன் சரித்திரப் பலவிசைக் கண்ணி (1880). |
இந்நூல் மன்மதனது வரலாற்றை கீர்த்தனம் சிந்து முதலிய இசைப்பாடல்களில் கூறுவது. மதுரை முதலியார், கு. (20 நூ) | ஊர் : | மதுரை. | | பிறப்பு : | 1898. | | நூல்: | தமிழ்ப்பெரும் புலவர், தமிழ்நாட்டுப் பெரியோர், சிலப்பதிகாரக் கட்டுரை. |
தமிழ்நாட்டுப் பெரியோர் என்ற நூல் நம்மாழ்வார், மாணிக்கவாசகர், திருமங்கை மன்னர் வாழ்க்கை வரலாறுகளைக் கூறுவதாகும். தமிழ்ப் பெரும் புலவர்:- கம்பர், திருவள்ளுவர், ஒட்டக்கூத்தர் ஆகியோர் வரலாற்றைக் கூறுவது. மதுரை வேளாசான் (சங்ககாலம்) இவர் ஊராற் பெயர்பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர். வேளாசான் என்பதனால் வேள்வியியற்றும் ஆசிரியர் என்று கருதலாம்.
|