பக்கம் எண் :

மயன்

மயன் (19-நூ)

நூல் :சிற்ப நூல் என்னும் மனையடி சாத்திரம் (1875), சிற்ப சிந்தாமணி.

முதல் நூல் கட்டடக்கலை பற்றியது. செய்யுட்களோடு உரைநடையிலும் சில விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்குரிய நிலம், மரம் முதலியனவற்றைத் தேர்ந்தெடுக்கும் முறை, வீட்டினை அமைக்கும் வகை முதலியன பற்றிக் கூறப்பட்டுள்ளன; 264 செய்யுட்களில் இயன்றது.

மயில்சாமி, ஆர். எஸ். (20-நூ)

பிறப்பு :1898.
நூல் :

பழநியாண்டவர் திருப்பள்ளியெழுச்சி. இந்நூல் பழநிமலைக்குன்றில் அமர்ந்துள்ள பழநி ஆண்டவரைப் போற்றிப் புகழ்வது.

மயில் சுந்தரசாமிகள் (19-நூ)

நூல் :

பெரிய சுப்பா ரெட்டியார் என்பவர் இயற்றிய ‘அன்னதானமகத்துவ புராணம்’ என்னும் நூலினைப் பாராட்டி வழங்கிய சிறப்புப் பாயிரம்.

மயில் வாகனப் புலவர் (19-நூ)

ஊர் :ஈழநாட்டில் மாதகல்.
வாழ்ந்த காலம் :கி.பி. 1779 -1816.

இவர் வையா என்னும் புலவரது வழிமுறையில் தோன்றியவர் கூழங்கைத் தம்பிரானிடத்தில்தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றவர்.

நூல் :

புலியூரந்தாதி, ஞானாலங்கார ரூபநாடகம், காசி யாத்திரைவிளக்கம், யாழ்ப்பாண வைபவ மாலை.