புலியூரந்தாதி : தில்லையில் எழுந்தருளிய கூத்தப்பிரான்மீது இயற்றப்பெற்றது மிக அழகிய சந்தப்பாக்களால் அமைந்தது. ம.க. வேற்பிள்ளை என்பவர் உரை எழுதியுள்ளார். யாழ்ப்பாண வைபவம் : யாழ்ப்பாணத்தின் பழைய வரலாற்றை ஓரளவுக்கு விளக்கிக் கூறுவது. தென்னிந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வேளாண் செல்வர்களுடைய பெயர்களும் அவர்கள் குடியேறிய இடங்களின் பெயர்களும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. மயிலுப்பிள்ளை (20 - நூ) | நூல் : | ஞானசவுந்தரி அம்மானை (1900). |
மயிலேறு, சி.ஆர் (20 - நூ) இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறையில் பணியாற்றியவர். | நூல் : | என்ன வாழ்க்கை இது? ஒதெல்லோ. |
முதல் நூல் சமுதாயம் பற்றிய ஐந்து ஓரங்க நாடகங்களைக் கொண்டது. மயிலேறும் பெருமாள் பிள்ளை (17 - நூ) | ஊர் : | பாண்டி நாட்டிலுள்ள திருநெல்வேலி. | | தந்தை : | தாண்டவமூர்த்திப்பிள்ளை; வேளாளர், |
இவர் செல்வக் குடியில் பிறந்தவர். தமிழ்ப் பற்றும் சைவப் பற்றும்மிக்கவர். இறைவனிடத்தும் அடியார் மாட்டும் பேரன்பு கொண்டவர். இலக்கணக் கொத்துஎன்ற நூலினை இயற்றிய சாமிநாத தேசிகருக்கு இவர் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
|