வழக்கில் சிதைவு - இலக்கியம்

117

வாடிய நிறத்துக்குக் குருவியின் நிறம்

6

வாய்க்கு ஏலம்பூ

256

விழிக்குக் கிளி

166

27 பழமொழிகள்

அவல் பெருத்தது ஆர்க்காடு1

அழுதழுது புரண்டாலும் அவள் தான் பிள்ளை பெற வேணும்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்

ஆகாசம் பூமி பாதாளம் சாட்சி

ஆசை உறவாகுமோ, ஆதரவு சோறாகுமோ

ஆசைக்காரனுக்கு ரோசம் இல்லை

ஆடி மாசம் அடி வைக்கக் கூடாது

ஆலாய்ப் பறக்கிறான்

ஆறிலும் சாவு, நூறிலும் சவு

இஞ்சி தின்ற குரங்குபோல

இத்தனையும் செய்து, கத்தரி நட்டவன் இல்லை என்று சொன்னான்

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக் கூடாது

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்

எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி கொட்டாவி விட்டதுபோல

எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடுதல்

எள்ளுக்குள் எண்ணெய்போல்

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா

ஏணி வைத்தாலும் எட்டாது

ஒருத்திக்கு ஒரு மகன்

கண்ணாலேயும் பார்த்ததில்லை, காதாலேயும் கேட்டதில்லை

கருமம் தொலையாது

கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருசன்

கல்யாணம்பண்ணுமுன்பு கன்னி குளி குளிப்பாளா?

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்

காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி

கோடி சனம் கையெடுக்கும்

செட்டி சிதம்பரம்

தப்பிப் பிழைத்தது தம்பிரான் புண்ணியம்

தருமம் தலைகாக்கும்

தாய்க்குத் தலைப்பிள்ளை

துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்

தொட்டிலை ஆட்டித் தொடையையும்

அறுத்தான்

தொண்டை வலிக்குச் சாராயம் தொடை வலிக்கு வெந்நீர்

தோட்டி முதல் தொண்டமான்வரை

நெற்றி வேர்வை நிலத்தில் விழ

பணம் பெருத்தது நீலகிரி

பள்ளுப்பறை பதினெட்டுச் சாதி

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது

பொந்திலே அகப்பட்ட மந்தியைப் போல

மலை ஏறிப் போனாலும் மச்சான் தயவு வேணும்

மலைபோல் வந்தது பனிபோல் விலகியது

மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி

வம்புச் சண்டையை வளர்க்க மாட்டோம், வந்த சண்டையையும் விடமாட்டோம்.

விதி வசம்போல் ஆகும்

விருந்தும் மருந்தும் மூன்று நாள்

வெல்லம் பெருத்தது வேலூர்.

______________________________________________
    1. அருமையாக வழங்குவன.