இலக
இலக்கணத்துக்கு மாறு
இலக்கணத்துக்கு மாறாகப்
பலவற்றை நாடோடிப் பாடல்களில் காணுகிறோம். பேச்சு வழக்கில் எவ்வாறு இலக்கண வழுக்கள்
இருக்கின்றனவோ அப்படியே நாடோடிப் பாடல்களிலும் இருக்கின்றன. கொச்சை வார்த்தைகளும் இலக்கண
வழுக்களும் பேச்சு மொழிக்கு இயல்பாகிவிட்டன; அவ்வாறே நாடோடிப் பாடல்களிலும் அவை இயல்பாகப்
பொருந்திவிட்டன.
ராமரே துணைவா - ராகவரே
தண்டம்
ரட்சிப்பதுன் பாரம் -
இரண்டுடனே வாரீர்1
என்பதில் ஒருமையும் பன்மையும்
மயங்கி வந்திருக்கின்றன.
பயிரும் விளையாது பறவைகள்
நாடாது
குடிக்கஜலம் கிடையாது
குருவிகள் நாடாது2
என்பதிலும் ஒருமை பன்மை மயக்கம்
இருக்கிறது.
திருப்பிச் சொல்லுதல்
நாடோடிப் பாடலைப்
படித்துப் பார்ப்பதில் இன்பம் அவ்வளவு இராது. அதைப் பாடிக் கேட்கும்போதுதான் அதன் இசையும்
தாள அமைப்பும் ஒருவிதமான கவர்ச்சியைத் தருவதைக் காணலாம். இலக்கியங்களில் ஒன்றையே திருப்பித்
திருப்பிச் சொன்னால் அது கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படும். ஆனால் நாடோடிப் பாடல்களிலே
சொன்னதையே மடக்கி மடக்கித் திருப்பிச் சொல்வது மரபு. கந்தருவ மார்க்கம் என்னும் இசைப்பாட்டு
நெறியில் அடிகள் இடை மடக்கி வருவதைப் பார்க்கிறோம். இயற்றமிழில் கூறியது கூறலாக முடிவதே
இசைத் தமிழ் உருப்படிகளில் இடை மடக்காக வந்து நயத்தைத் தருகிறது. கீர்த்தனங்களில் பல்லவி
பலமுறை வருவது இசைப் பாட்டுக்கு இன்பம் உண்டாக்குகிறது. நாடோடிப் பாடல்களும் இசையோடு பாடப்படுவன
ஆதலின் அவற்றில் மீட்டும் மீட்டும் சில சொற்றொடர்களும் அடிகளும் வருவது அவற்றிற்கு அழகு
பயப்பதாக இருக்கிறது.
ரோடுஎல்லாம் கொழுத்தாடை
ரொம்பிக் கிடக்குதுபார்
- ராசாத்தி
ரொம்பிக் கிடக்குதுபார்
_________________________________________________
1. நாடோடி இலக்கியம், ப. 28.
2. அல்லியரசாணி
மாலை.
|