என
என்பதில் புரட்டாசி என்ற சொல்
வாய்மொழியிலே சிதைந்த உருவமாகிய பெரட்டாசி என்று நின்று, பெரிய என்பதில் உள்ள முதலெழுத்தோடு
ஒன்றி மோனையமைதி பெற்றிருக்கிறது. பெரட்டாசியைப் புரட்டாசி ஆக்கிவிட்டால், பெரிய என்பதைப்
புரிய ஆக்க இயலுமா?
மோளங்களும் தாளங்களும்
முழங்குதடி கோயிலிலே1
என்பதில் மேளம்
மோளமாகியிருக்கிறது.
புள்ளையைப்போல் பொத்திப்
பொத்திக் - கண்ணே நல்ல
பொறுமையோடே வளர்ப்பாங்களாம்2
என்பதில் பிள்ளை புள்ளையாகி
யிருக்கிறது.
அடிதொடங்கி நுனிவரைக்கும்
- கண்மணியே
அல்லாத்துக்கும்
காசுதானாம்3
என்பதில் அல்லாத்துக்கும் என்பதை
எல்லாவற்றிற்கும் என்று மாற்றினால் மோனை போய்விடும்.
சிதைந்த சொல்லைத் திருத்தப்
புகுந்தால் ஓசை கெட்டுவிடுவதற்குச் சில உதாரணங்கள் வருமாறு:-
தமயந்தியைக் கட்டணுன்னு
சனிபகவான் பட்டபாடு4
என்பதை, ‘தமயந்தியைக் கட்டவேண்டுமென்று’
என்று மாற்றினால் ஓசை கெட்டுவிடும்.
பிச்சை கொடுக்க
ணும்னாக் கூடச் சுண்டெலிப் பெண்ணே
பட்சமாய்க் கொடுக்க ணுண்டி
சுண்டெலிப் பெண்ணே5
என்பதில், “பிச்சை கொடுக்க வேண்டுமென்றால்கூட”
என்று திருத்தினால் ஓசை நீண்டுகொண்டே போகும்.
ஆடிருக்கு மாடிருக்கு - கண்ணே
உனக்கு
அழகான வீடிருக்கு6
என்பதிலுள்ள சொற்களை,
‘ஆடிருக்கிறது, மாடிருக்கிறது, வீடிருக்கிறது’ என்று மாற்றினால் அப்பால் அதில் பாட்டே இராது.
______________________________________________________
1. மலையருவி,
223; 6.
2. மேற்படி 243; 82.
3. மேற்படி 243;
89.
4. மேற்படி 92; 51.
5. மேற்படி 207; 54.
6. மேற்படி 222; 2
|