என
என்பவற்றில் வரும் சந்தை, துப்பட்டி,
அம்மத்தாள் என்ற சொற்களை இலக்கியங்களில் காணல் இயலாது. சி்தைந்து வழங்கும் சொற்களும்
சொற்றொடர்களும் கணக்கு வழக்கின்றி நாடோடிப் பாடல்களில் வரும். அவற்றைத் திருத்தினால்
எதுகை, மோனை, ஓசை ஆகியவை சிதைந்துவிடும்.
தென்ன மரத்துப்
பாளைக்குள் ளேரெண்டு
தேரை இருந்து
முழிக்குதுபார்
தென்ன லடிக்குது என்னை
மயக்குது
தேன்மொழி யேமுத்து
வீராயி1
என்ற முத்துவீராயி பாட்டில், தென்னல்
என்று வருவது தென்றல் என்பதன் சிதைந்த உருவம். இயல்பான சொல்லாக அதைத் திருத்தினால் முன்
அடியிலுள்ள தென்னமரம் என்பதற்கு ஏற்ற எதுகை அமையாது; ஆதலின் தென்னல் என்று இருப்பதே பொருத்தம்.
அண்ணைக்குச் சொன்ன
சொல்லு
அம்புட்டையும் மறந்திட்டையோ
கண்ணாட்டி உன்னாலே கலங்குறேண்டி
இந்தவேளை2
இதில் அன்றைக்கு என்று
திருத்தினால் எதுகை நயம் போய்விடும்.
ஒத்தையிலே இருக்கிறேண்ணு
ஒருகாலும் நினைக்காதேடா
கத்திக்கிரை ஆகாதேடா3
என்பதில் ‘ஒத்தையிலே’ என்பதை
‘ஒற்றையிலே’ என்று மாற்றினாலும்,
சின்னக்குட்டி நாத்தனாள்
- ஏலங்கிடி லேலோ
சில்லறையை மாத்தினாள்
- ஏலங்கிடி லேலோ4
என்பதில் மாத்தினாள் என்பதை
மாற்றினாள் என்று திருத்தினாலும் எதுகையழகு இல்லாமற் போய்விடும்.
இப்படியே மோனையிலும் வழக்குச்
சொற்கள் அமைந்து மாற்ற முடியாமல் இருக்கும் இடங்கள் பல.
பெரட்டாசி மாதத்திலே
பெரியகடை வீதியிலே5
_____________________________________________________
1. நாடோடி இலக்கியம் ( கி. வா. ஜ ), ப. 111.
2. மலையருவி,
71; 3.
3. மலையருவி,
ப. 89; 35.
4. மேற்படி 136; 1.
5. மேற்படி 85; 10
|