New Page 1

24

ஆராய்ச்சி உரை

வெத்தலைக் கட்டு விரியக் கட்டு
தோட்டத்துக் காரனைப் புடிச்சுக் கட்டு1

என்பதிலும் அந்த இயல்பையே காணலாம்.

ஓசை அமைதி

    இலக்கியங்களில் நால்வகைப் பாக்களும் அவற்றின் இனங்களும் அமைந்திருக்கின்றன. நாடோடிப் பாடல்களில் பெரும்பாலும் கண்ணிகளும் சிந்துகளும் பயின்று வருகின்றன. பல பாடல்களில் ஏதோ ஒருவகையில் ஒழுங்கான ஓசை அமைதி இருக்கிறது. சில வகையான பாடல்களுக்கு இன்ன ஓசைதான் என்ற மரபு அமைந்திருக்கிறது. தெம்மாங்கு என்பது ஒரு குறிப்பிட்ட ஓசையமைதியோடு இருக்கிறது. தாலாட்டு, ஏற்றப் பாட்டு, ஒப்பாரி, கும்மி, ஓடப் பாட்டு முதலியவற்றிற்கும் திட்டமான உருவங்கள் அமைந்திருக்கின்றன. இன்ன பாட்டிற்கு இன்னதுதான் இலக்கணம் என்று புலமையுலகத்து வாய்பாட்டிலே சொல்ல இயலாவிட்டாலும் காதிலே கேட்டால் இன்ன பாட்டு என்று பழக்கத்தால் தெரிந்து கொள்ளலாம். இலக்கியங்களில் வரும் பாக்களுக்கும் இந்த இலக்கணம் பொருந்தும். பேராசிரியர் பாவைப்பற்றிச் சொல்லுகையில், ‘பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமற் பாடம் ஓதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற் கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை’2 என்று கூறுவதிலிருந்து இது புலனாகும்.

சொற்கள்

    நாடோடிப் பாடல்களில், வழக்கில் மாத்திரம் வழங்கும் சொற்களும், சிதைந்த சொற்களும் மிகுதியாக வரும்.

சந்தை விலைமதிப்பாள் சந்தனத்தைத் தோற்கடிப்பாள்3
    துப்பட்டி வாங்கித் தந்தால் - மாமாடா
        தோளிலே போர்த்திப் பார்ப்போம்4
    அம்மத்தாளிடம் கொடுத்தேன்
5
_____________________________________________________

    1. குழந்தை உலகம் ( கி. வா. ஜ. ), ப. 34.
    2. தொல். செய்யுள் 1, உரை.
    3. கஞ்சியிலும் இன்பம் ( கி. வா. ஜ. ), ப. 19.
    4.           மேற்படி ப. 23.
    5. குழந்தை உலகம் ( கி. வா. ஜ. ), ப. 76.