என

பலவகைப் பாடல்கள்

29

என்பதனால் ஆடவன் பெண்களைப் புகழ்ந்து பாடுவது ஒருவகை என்று புலனாகும். அப்படிப் பாடுகிறவன் பாடினால் அதைக் கேட்டு மகளிர் ஆடுவது உண்டு.

பாட்டுக்காரன் தாண்டிஅவன் - ஏலங்கிடி லேலோ
    பாடப்பாட ஆடலாண்டி - ஏலங்கிடி லேலோ.1

    அவ்வாறு பாடும் பாடல்களில் ஏலேலங்கிடிப் பாட்டு, தில்லாலங்கிடிப் பாட்டு, கள்ளன் பாட்டு, தெம்மாங்குப் பாட்டு, வண்டிக்காரன் பாட்டு என்று பலவகை உண்டு.

ஏலேலங்கிடிப் பாட்டுப்பாடி - ஏலங்கிடி லேலோ
    எடுப்போமையா கருத்தா நாற்றை - ஏலங்கிடி லேலோ
    தில்லாலங்கிடிப் பாட்டுப்பாடி - ஏலங்கிடி லேலோ
    திருப்பித் திருப்பி நடுவோமையா - ஏலங்கிடி லேலோ
    கள்ளப்பாட்டையும் கலந்து பாடி - ஏலங்கிடி லேலோ
    நல்ல மனசா நடுவோ மையா - ஏலங்கிடி லேலோ
    தெம்மாங்குப் பாட்டுப் பாடி - ஏலங்கிடி லேலோ
    கம்மால் பண்ணவே மாட்டோ மையா - ஏலங்கிடி லேலோ
    வண்டிக்காரன் பாட்டுப் பாடி - ஏலங்கிடி லேலோ
    வழிவிலக மாட்டோ மையா - ஏலங்கிடி லேலோ2

என்னும் இடத்தில் அந்தப் பாட்டுக்களைப்பற்றித் தொழில் செய்யும் பெண்கள் சொல்லுகிறார்கள்.

    திருடனாக நடித்துப் பாடும்போது பாடுவது கள்ளப் பாட்டு. அதைப்பற்றிய பேச்சுப் பின்னும் இரண்டு இடங்களில் வருகிறது.

கள்ளப் பாட்டுக் கற்றுக் கொண்டு    
    கணக்கா வந்தேனே - கன்னக்கோலைக்
    கையில் எடுத்தேனே - கட்டிடத்தை   
    நாசம் செய்தேனே.3

    மானா மதுரை மகராஜன் ராத்திரி
    ஒருமணி தேட்டை - என்னைக்கண்டு
    சிரிக்குது மூட்டை - வாயெடுத்துப்
    படிப்பனே பாட்டை4

    தெம்மாங்கு என்பது ஒருவகைப் பாட்டு. அதைப்பற்றிப் பிறிதோரிடத்தில் நான் எழுதியிருப்பதிலிருந்து ஒரு பகுதியை இங்கே கொடுப்பதில் தவறில்லையென்று எண்ணுகிறேன்.
_____________________________________________

    1. ப. 134 : 93.
    2. ப. 146 : 55-9.
    3. ப. 192 : 3.
    4. ப. 193 : 8.