ச
சீர்குலைக்கப் பார்த்தவங்க
சீரழிந்தார் என்கண்முன்னே
வெட்கப்படுத்தப் பார்த்தவங்க
வெட்கப்பட்டுப்
போனாரம்மா!1
அண்டை வீட்டாரும்
அடுத்த வீட்டாரும் ஆச்சரியப்பட்டார்களாம். குழந்தையின் தந்தையும் அவளும் சேர்ந்து ஆண்டவரைத்
தொழுதார்களாம்.
9. சிறுவர் உலகம்
குழந்தை உலகத்தில்
இருவகையான பாட்டுக்களைக் காணலாம். ஒன்று, குழந்தைக்காக மற்றவர்கள் பாடுவன. மற்றொன்று குழந்தைகளே
பாடுவன. இந்தப் பகுதியில் உள்ள முதல் மூன்றும் பிறர் பாடுவன. குழந்தையைச் சாய்ந்தாடவும், கை
வீசவும், தோள் வீசவும் பழக்கும்போது பாடும் பாடல்கள் இவை.
கண்ணாமூச்சி விளையாட்டுப்
பாட்டுப் பின்னே உள்ளது. இத்தகைய விளையாட்டுப் பாடல்களில் ஓசைதான் முக்கியம். சில சொற்களுக்கு
ஓசை இருக்கும்; பொருள் இராது. சி்லவற்றிற்குப் பொருள் இருக்கும்; தொடர்பு இராது. பலிஞ்சடுகுடு
விளையாட்டில் மூச்சு விடாமல் ஆண்பிள்ளைகள் பாடல்களைச் சொல்வார்கள். பாட்டின் கடைசியில்
வரும் சொல்லைப் பன்முறை சொல்வார்கள். அந்தப் பாட்டுக்குப் பொருள் என்ன என்று பார்ப்பதனால்
பயன் ஒன்றும் இல்லை.
பெண்கள் விளையாடுவது கல்லாங்காய்
விளையாட்டு; கழங்காடல் என்றும் இதைச் சொல்வார்கள். பெதும்பைப் பருவத்துப் பெண்கள் கழங்கு
விளையாடுவதாகவும் அப்போது ஒன்று முதல் ஏழு வரையில் எண்ணிக்கை வரும்படியான பாடல்களைப் பாடுவதாகவும்
புலவர்கள் உலா என்னும் பிரபந்தத்தில் அமைத்திருக்கிறார்கள்.2
கல்லாங்காய் விளையாட்டுப்
பாட்டிலும் இந்த வரிசையைப் பார்க்கலாம். எப்படியாவது ஒன்று இரண்டு முதலிய எண்ணின் பெயர் தொனித்தால்
போதும், இந்தப் பாட்டிலே.
______________________________________________________
1. ப. 255 : 86-89.
2. இதன் விரிவை,
குழந்தையுலகம் ( கி. வா. ஜ. ) 43-ஆம் பக்கம்
முதலியவற்றில் காணலாம்.
|