New Page 1
கொக்குச்சிக்
கொக்கு
ரெட்டை சிலாக்கு
மூக்குச் சிலந்தி
நாக்குலா வரணம்
ஐயப்பன் சோலை
ஆறுமுக தாளம்
ஏழுக்குக் கூழு
எட்டுக்கு முட்டி
ஒன்பது கம்பளம்
பத்துப்பழம் சொட்டு!1
இதில் இரண்டு முதல்
பத்து வரையில் எண்களின் பெயர்கள் உள்ளன. ரெட்டை, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என்பன
வெளிப்படையாக எண்ணுப் பெயர்களாக இருக்கின்றன. மூக்கு என்பது மூன்றையும், நாக்கு என்பது நான்கையும்,
ஐயப்பன் என்பது ஐந்தையும் ஒலியினால் நினைப்பிக்கின்றன. இப்படி ஐந்து பாட்டுக்கள் இப் புத்தகத்தில்
இருக்கின்றன.
வினா விடைகளை ஐந்து
விளையாட்டுப் பாடல்களில் காணலாம். இரண்டு குழந்தைகளில் ஒருவர் கேட்க மற்றொருவர் விடை கூற
வளரும் பாட்டு இது. சொன்ன வார்த்தையின் முதல் பகுதியைக் கேள்வியாகக் கேட்க, அதற்கு விடை
சொல்ல, அந்த விடையின் முற்பகுதியை மீட்டும் கேட்க, விடை சொல்ல, இந்த வினா விடை நீண்டுகொண்டே
போகும்.
நிலாப் பாட்டு இன்சுவை
ததும்பும் பாடல்களையுடைய பகுதி. குழந்தைக்கு விளையாட்டுக் காட்டத் தாயும் பிறரும்
பாடுவார்கள்; குழந்தைகளும் பாடுவார்கள்.
எட்டி எட்டிப்
பார்க்கும்
வட்ட வட்ட நிலாவே!
துள்ளித் துள்ளிச்
சிரிக்கும்
தும்பைப்பூவு நிலாவே!2
என்பது அற்புதமான கவிதை.
‘சிறுவர் உலகம்’
என்ற பகுதியின் இறுதியில் வேடிக்கைப் பாட்டுக்கள் இருக்கின்றன.
___________________________________________________
1. ப. 262 : 1.
2. ப. 268 : 2.
|