ஏச
ஏச்சுமாடு பிடிக்கவாற -
தங்கமாமாவே
ஏர்க்காடு வரமாட்டேன்
- பொன்னுமாமாவே
பட்டுக்கரை வேட்டிக்காரா
- தங்கமாமாவே
பட்டுமலை வரமாட்டேன்
நான் -
பொன்னுமாமாவே.
10
நயமாத்தான் பேசிவாற -
தங்கமாமாவே
நடையாறு வரமாட்டேன்நான்
- பொன்னுமாமாவே
பில்லைத்தன மாப்பிழைக்கத்
தங்கமாமாவே
பீலிமேடு வரமாட்டேன்நான்
- பொன்னுமாமாவே.
11
தங்கத்தைநீ குமிச்சிட்டாலும்
- தங்கமாமாவே
தங்கமலை வரமாட்டேன்நான்
- பொன்னுமாமாவே
ஒய்யார நடைநடக்கும் -
தங்கமாமாவே
ஒற்றைப்பாறை வரமாட்டேன்நான்
-
பொன்னுமாமாவே.
12
முன்னம்பல் வரிசைக்காரா
- தங்கமாமாவே
மூணூரு வரமாட்டேன்நான்
- பொன்னுமாமாவே
தெய்வங்குடி இருந்திட்டாலும்
- தங்கமாமாவே
தேவிகுளம் வரமாட்டேன்நான்
-
பொன்னுமாமாவே.
13
கண்உருண்டு திரண்டிருக்கும்
- தங்கமாமாவே
கருங்குளம் வரமாட்டேன்நான்
-
பொன்னுமாமாவே
செல்லமா வளர்ந்துவந்த -
தங்கமாமாவே
செண்டுவரை வரமாட்டேன்நான்
-
பொன்னுமாமாவே.
14
|