பக்கம் எண் :

லட

102

மலையருவி

லட்டு கொடுத்திட்டாலும் - தங்கமாமாவே
        சிட்டிவரை வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
    சிவன்குடி இருந்திட்டாலும் - தங்கமாமாவே
        சிவன்மலை வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே.
    

15

காசுபணம் கொடுத்திட்டாலும் - தங்கமாமாவே
        ஊசிமலை வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே
    கண்ணுகிண் ணடிக்கலைநான் - தங்கமாமாவே
        கருமலை வரமாட்டேன்நான் - பொன்னுமாமாவே.
   

16

மாமன் அழைத்தல்

அஞ்சணாக் கூலிகிடைக்கும் - தங்கம்தையலாளே
        ஐயர்பாடி வாறியாடி - பொன்னுகுயிலாளே
    செக்குச்செக்காத் தான்கொடுக்கும் - தங்கம்தையலாளே
        சேக்கல்முடி வாறியாடி - பொன்னுக்குயிலாளே.
         

17

ரஸகுண்டு போலேஇருக்கும் - தங்கம்தையலாளே
        கஜமுடிக்கு வாறியாடி - பொன்னுகுயிலாளே
    கண்டநேரம் கள்குடிக்கத் - தங்கம்தையலாளே
        கண்டிதேசம் வாறியாடி - பொன்னுக்குயிலாளே.  
   

18

தாய்போலே பாதுகாக்கும் - தங்கம்தையலாளே
        தாயமுடி வாறியாடி - பொன்னுகுயிலாளே
    அறியாத பருவம்நீ - தங்கம்தையலாளே
        பெரியாறு வாறியாடி - பொன்னுகுயிலாளே.     
     

19

நாளெல்லாம் பாலுபொங்கும் - தங்கம்தையலாளே
        பாலாறு வாறியாடி - பொன்னுகுயிலாளே
    தாய்க்குத் தலைப்பிள்ளைநீ - தங்கம்தையலாளே
        தலையாறு வாறியாடி - பொன்னுகுயிலாளே.

20