பக்கம் எண் :

116

மலையருவி

பாவநாசம் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    பாதரசம் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.

60

ஒலவக்கோட்டுச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    ஒட்டியாணம் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.

61

வைகையாற்று ஓரத்திலே - ஏலங்கிடி லேலோ
    கைவளையல் வாங்கித்தாரேன் - ஏலங்கடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.

62

மோருக்கடைப் பக்கத்திலே - ஏலங்கிடி லேலோ
    மோதிரங்கள் வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.

63

மயிலாடியூர்ச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    மயிர்மாட்டி வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.

64

வந்தவாசிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    வைரக்கல்லு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.
         

65

சத்திரப்பட்டிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    சரடுஒண்ணு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.

66

பட்டுக்கோட்டைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    பதக்கம்ஒண்ணு வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.

67