வ
வாணியம்பாடிச் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
வாழைப்பூ வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
52
வடமதுரைச் சந்தையிலே -
ஏலங்கிடி லேலோ
வாடாமல்லிகை வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
53
மூக்குப்பேரிச் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
மூக்குத்தியும் வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
54
மூக்குப்பேரிச் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
முருங்கப்பூ வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
55
காரைக்காலுச் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
கம்மல்ரெண்டும் வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
56
பெருமாள்கோயில் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
பீலிரெண்டு வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
57
பில்லானூருச் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
பில்லாக்கொண்ணு வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
58
காரைக்குடிச் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
காலுத்தண்டை வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
59
|