மண
மண்டபத்துச் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
மல்லிகைப்பூ வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
44
குத்தாலத்துச் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
கொண்டைத்திருகு வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
45
செட்டிகுளம் சந்தையிலே -
ஏலங்கிடி லேலோ
செந்தாமரை வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
46
பூலத்தூருச் சந்தையிலே -
ஏலங்கிடி லேலோ
பூலாங்கிழங்கு வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
47
செவ்வாய்ப்பேட்டைச் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
செவந்திப்பூவு வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
48
மஞ்சக்குப்பம் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
மஞ்சள்பூவு வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
49
வேலூருச் சந்தையிலே -
ஏலங்கிடி லேலோ
வெட்டிவேரு வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும் கண்ணே.
50
ஆரப்பாளையம் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
அரளிப்பூவு வாங்கித்தாரேன்
- ஏலங்கிடி லேலோ
இன்னம் என்ன வேணும்
பெண்ணே - உனக்
கேது வேணும்
கண்ணே.
51
|