பக்கம் எண் :

ஆண் பெண் தர்க்கம்

113

காயங்குளத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    காய்கறியும் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
              

36

கண்டிகொழும்பு தேசம்போய் - ஏலங்கிடி லேலோ
    கடைச்சாமான் வாங்கணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
        

37

நாகலாபுரம் நாகசுரம் - ஏலங்கிடி லேலோ
    நாம்ஒழுங்கு செய்யணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.

38

நல்லநாள் எல்லாம்பார்த்து - ஏலங்கிடி லேலோ
    நல்லமுகூர்த்தம் வைக்கணும் - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
                

39

ஊர்நாடெல் லாம்அறிய - ஏலங்கிடி லேலோ
    ஒழுங்காத்தாலி கட்டணுமே - ஏலங்கிடி லேலோ
    என்ன செய்யலாம் மாமா - நாம்
        ஏது செய்யலாம் மாமா.
     

40

காதலன் விடை

மானாமதுரைச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    மருக்கொழுந்து வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னும் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.
             

41

தாடுபத்திரிச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    தாழம்பூ வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.

42

ரோட்டோரத்துச் சந்தையிலே - ஏலங்கிடி லேலோ
    ரோசாப்பூ வாங்கித்தாரேன் - ஏலங்கிடி லேலோ
    இன்னம் என்ன வேணும் பெண்ணே - உனக்
        கேது வேணும் கண்ணே.
         

43