ர
ராவிலே கடைக்குப்போய்
- ஏலங்கிடி லேலோ
ரவிக்கைத்துணி வாங்கணுமே
- ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
29
பம்பாய்க் கடைக்குப்போய்
- ஏலங்கிடி லேலோ
பாவாடை வாங்கணுமே - ஏலங்கிடி
லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
30
அலர்மேல்செட்டி கடைக்குப்போய்
- ஏலங்கிடி லேலோ
அரிசிபருப்பு வாங்கணுமே -
ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
31
ஆடலூருச் சந்தையிலே -
ஏலங்கிடி லேலோ
ஆடுரெண்டு வாங்கணுமே -
ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
32
கோயம்புத்தூர்ச் சந்தையிலே
ஏலங்கிடி லேலோ
கோழிரெண்டு வாங்கணுமே -
ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
33
நெய்யூருச் சந்தையிலே
ஏலங்கிடி லேலோ
நெய்கொஞ்சம் வாங்கணுமே
- ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
34
நல்லகறுப்பன் பட்டியிலே
- ஏலங்கிடி லேலோ
நல்லெண்ணெய் வாங்கணுமே
- ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
35
|