மய
மயிலாடியூர்ச் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
மயிர்மாட்டியும் வாங்கணுமே
- ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
22
மோருக்கடைப் பக்கத்திலே
- ஏலங்கிடி லேலோ
மோதிரங்கள் வாங்கணுமே
- ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
23
வந்தவாடிச் சந்தையிலே
ஏலங்கிடி லேலோ
வைரக்கல் வாங்கணுமே ஏலங்கிடி
லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
24
சத்திரப்பட்டிச் சந்தையிலே
- ஏலங்கிடி லேலோ
சரடுஒண்ணு வாங்கணுமே -
ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
25
பட்டுக்கோட்டைச் செட்டிகிட்டே
- ஏலங்கிடி லேலோ
பதக்கம்ஒண்ணு வாங்கணுமே
- ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
26
நாட்டுக்கோட்டைச் செட்டிகிட்டே
- ஏலங்கிடி லேலோ
நாலுநகை வாங்கணுமே - ஏலங்கிடி
லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
27
காசுக்கடை வீதியிலே -
ஏலங்கிடி லேலோ
காசிப்பட்டு வாங்கணுமே -
ஏலங்கிடி லேலோ
என்ன செய்யலாம்
மாமா - நாம்
ஏது செய்யலாம் மாமா.
28
|